×

சில்லிபாயின்ட்…

* ஆசிய கோப்பை யு-23 கால்பந்து போட்டியில் ஆஸ்திரேலியாவை முதன்முறையாக வீழ்த்தி இந்தோனேசியா சாதனை படைத்துள்ளது. கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெறும் இத்தொடரின் ஏ பிரிவு லீக் சுற்றில் இந்தோனேசியா 1-0 என்ற கோல் கணக்கில் வென்று அசத்தியது. அந்த அணியின் கொமாங் டெகு 45வது நிமிடத்தில் கோல் போட்டார். ஏ பிரிவில் இருந்து கத்தார், இந்தோனேசியா அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.

* கிர்கிஸ்தானில் ஒலிம்பிக் தகுதிச் சுற்று மல்யுத்தப் போட்டி நேற்று தொடங்கியது. ரஷ்யாவில் ஒரு வாரம் பயிற்சியில் இருந்த இந்தியாவின் தீபக் புனியா, சஜித் கல்கா மற்றும் பயிற்சியாளர்கள் ரஷ்யாவில் இருந்து துபாய் வழியாக ஏப்.16ம் தேதி கிர்கிஸ்தான் புறப்பட்டனர். கடும் மழை காரணமாக துபாயில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் பயணத்தை தொடர முடியாமல் வீரர்கள் 2 நாட்களாக உணவு, தங்கும் வசதி இல்லாமல் துபாய் விமான நிலையத்தில் சிக்கி தவித்தனர்.

நேற்று முன்தினம் இரவு தான் அங்கிருந்து கிர்கிஸ்தான் புறப்பட்டனர். அதனால் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய போட்டிக்கான எடை, உயரம், உடல்நிலை தகுதி தேர்வில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டது. இருப்பினும், அடுத்த மாதம் நடைபெற உள்ள உலக தகுதிச் சுற்றில் பங்கேற்கும் வாய்ப்பு இவர்களுக்கு உள்ளது. அதே சமயம் டெல்லியில் இருந்து நேரடியாக கிர்கிஸ்தானின் பிஷ்கேக் நகருக்கு சென்ற வினேஷ் போகத் உடல் தகுதி முகாமில் பங்கேற்றதுடன், இன்று நடைபெறும் போட்டியில் பங்கேற்கிறார். புனியா, கல்கா ஆகியோருக்கான விமான ஏற்பாடுகளை இந்திய மல்யுத்த கூட்டமைப்புதான் செய்திருந்தது.

* கனடாவில் நடக்கும் ஃபிடே கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் இந்திய வீரர்கள் உட்பட 8 கிராண்ட் மாஸ்டர்கள் பங்கேற்றுள்ளனர். அங்கு நேற்று நடந்த 12வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் அஜர்பைஜான் வீரர் நிஜாத் அபசோவை வீழ்த்தினார். அதனால் 7.5 புள்ளிகளுடன் மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார். தலா 7.5 புள்ளிகளை பெற்றுள்ள அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா, ரஷ்யாவின் அயான் நெபோம்நியாட்சி முறையே 2, 3வது இடங்களில் உள்ளனர். இந்தியாவின் பிரக்‌ஞானந்தா, ரஷ்யாவின் அயான் நெம்போம்நியாட்சி ஆகியோர் இ டையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது. சந்தோஷ் குஜராத்தி தோல்வியை தழுவினார். அதனால் இவர்கள் இருவரும் முறையே 6, 5 புள்ளிகளுடன் பின்தங்கியுள்ளனர்.

The post சில்லிபாயின்ட்… appeared first on Dinakaran.

Tags : Indonesia ,Australia ,Asian Cup U-23 football tournament ,A division ,Qatar ,Doha ,Dinakaran ,
× RELATED இந்தோனேசியாவில் கனமழை வெள்ளத்திற்கு 37 பேர் பலி